‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு புதுடெல்லி, செப்.7 - ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. ‘நீட்’ தேர்வு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற 12-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு நடைபெறும் நேரத்தில் சி.பி. எஸ்.சி. ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வுகளும் நடைபெற இருப்பதால் மாணவர்களிடையே குழப்பமான சூழ்நிலை உருவாகும். எனவே வருகிற 12-ந் தேதி நடைபெறவுள்ள ‘நீட’ தேர்வை தள்ளி வைக்க கோரி அரியானா மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் தள்ளுபடி இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஆலம் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். 

 வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், ‘16 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுத உள்ளனர். அதற்காக அவர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கின்றனர். அத்தகைய சூழலில் இதுபோன்ற வழக்கை விசாரித்து அந்த மாணவர்கள் மத்தியில் நிலையற்ற சூழலை உருவாக்க முடியாது. இந்த கோரிக்கையை மனுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கலாம்’ என்று தெரிவித்தனர். மேலும் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்து அதனை எழுத முடியாதவர்கள் நலன் கருதி, கடந்த ஆண்டைப் போல மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்கக்கோரிய மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஹால் டிக்கெட் வெளியீடு இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

Comments

Popular posts from this blog